ஶ்ரீ அருள்மிகு அத்தனூர் அம்மனே துணை !

ஶ்ரீ அருள்மிகு அத்தாயி அம்மனே துணை !

  1. எம் குலம் காக்கும் தாயே போற்றி !
  2. எம்மை தினம் காக்கும் தேவியே போற்றி!
  3. எம் வாழ்வின் ஆதாரமே போற்றி!
  4. எம்மை ஆட்கொள்ளும் அன்புள்ளமே போற்றி!
  5. எம் பிழைகளை மன்னிக்கும் கருணையே போற்றி!
  6. எம் பாவம் போக்கும் புண்ணியமே போற்றி!
  7. எம் புண்ணியம் பெருக்கும் தர்மமே போற்றி!
  8. எம் இருளை அகற்றும் ஒளியே போற்றி!
  9. எம் உள்ளத்துள் உறையும் உவகையே போற்றி!
  10. எம் சித்தத்தில் நிறைந்த அறிவே போற்றி!
  11. எம்மை நல்வழி நடத்தும் அறமே போற்றி!
  12. எம் துன்பம் தீர்க்கும் துணிவே போற்றி!
  13. எம்மை இயங்க வைக்கும் சக்தியே போற்றி!
  14. எமக்கு இல்லறம் அளித்த இனியவளே போற்றி!
  15. எம் வம்சம் வளர்க்கும் வாழ்வே போற்றி!
  16. எம் வறுமை போக்கும் வளமே போற்றி!

ஓம் அருள் உருவமே அத்தனூர் அம்மனே போற்றி! போற்றி!

Here is a recording in my voice. Please use as appropriate.

இதோ என் குரலில் ஒரு பதிவு. தகுந்தவாறு பயன்படுத்தவும்.

இந்இந்த பாடல் அனைத்து பெண் குல தெய்வங்களுக்கும் பொருந்தும் வகையில் எழுதி உள்ளேன், விருப்பம் உள்ளவர்கள் இந்த பாடலின் வரிகளைக் கொண்டு தங்கள் குலதெய்வத்தை துதித்து வழிபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பாடச்சாலையில் பாடம் புகட்டுபவர்கள் மட்டுமல்ல, நம் வாழ்க்கையில் நாம் நல்ல வழியில் பயணிக்க உதவுபவர்களும் நமக்கு ஆசானே .

நான் என் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளை கையாள கற்றுக்கொண்டது மரபணு ஜோதிடத்தை அறிந்த பிறகுதான்.

அதை எனக்கும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய மரபணு ஜோதிட ஆசான் திரு விஷால் லோகேஸ்வரன் அவர்களுக்கு எனது இந்த படைப்பை சமர்ப்பிக்கிறேன்.

Vishal Lokeswaran DNA Astrology. Kula Deiva Vazhipadu

🙏 நன்றி🙏
S . வினோதினி

Share to your friends and family